மிசோரமில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மிசோரமில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மாநில போலீசாருடன் இணைந்து போதைப் பொருள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டதில் ஐந்தரை கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் 16 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
















