சிவகங்கை பேருந்து விபத்தில் சிக்கி பலியானவர்களில், இளம்பெண்ணின் உடல் பல மணி நேரத்திற்குப் பின் அடையாளம் காணப்பட்டது.
குமங்குடிவிளக்கு பகுதியில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்தவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 54 பேர் காயமடைந்தனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவ்ர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததோடு, உயிரிழந்தவர்களின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை, திருப்பத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் 10 பேரின் உடல்களை அடையாளம் கண்ட காவல்துறையினர் ஒரு பெண்ணின் உடலின் அடையாளத்தைக் காண முடியாமல் திணறினர். பல மணி நேரத்திற்கு பின் அந்தப் பெண் கல்லூரி மாணவி டயானா என்பது அடையாளம் தெரிந்தது.
















