இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணையில் மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு அதிபரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது கடந்த 2019ம் ஆண்டு லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மூன்று தனித்தனி வழக்குகளில் லஞ்சம் வாங்குதல், மோசடி மற்றும் உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஊழல் வழக்கில் நெதன்யாகுவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணையில் மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு அதிபரிடம் கேட்டுக் கொண்டு, அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும் இது நல்லிணக்கத்தை ஊக்குவிக்கப் பெரிதும் உதவும் என்று உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.
















