தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தன்பாலின சேர்க்கைக்கு அழைத்த ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரடி குளத்தை சேர்ந்த சுதந்திர குமார் என்பவருக்குக் கிரிண்டர் செயலி மூலம் கோவில்பட்டியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் 16 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இருவரையும் சுதந்திரகுமார் தன்பாலின சேர்க்கைக்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சுதந்திரகுமாரை இருவரும் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















