சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீரை சேகரிக்கும் வகையில் குளங்கள் அமைக்கவும், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்க்கும்போது, இது போன்ற திட்டங்கள் மிகவும் அவசியமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் அரசு நிலத்தைக் குறிப்பிட்ட தனிநபர்கள், தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
















