சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர்.
சென்னைக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். முன்னதாகக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தது.
இதனால் கொட்டும் மழையிலும் நனைந்த படியே மாணவர்கள் பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் விடுமுறை அளிக்காத அரசின் அலட்சியத்திற்கு பெற்றோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களிலும் பலரும் எதிர்ப்புக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















