திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை மீது, சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீட்டர் தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த மலை முருகன் கோயில் சொத்து எனவும் மதுரையை ஆட்சி செய்த முஸ்லிம், ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் இந்த உரிமை பறிக்கப்படவில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த உத்தரவை அமல்படுத்துவதில் யாருடைய தலையீடும் இல்லை என்பதை மதுரை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
















