சென்னை காசிமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதால் வீடுகளுக்குள் குடில் அமைத்து பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
காசிமேடு இந்திரா நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
முறையான பராமரிப்பு இல்லாததால் குடியிருப்பின் மேற்பகுதியில் உள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்தநிலையில் அங்குள்ள ஒரு வீட்டின் மேற்கூரையில் இருந்து மழைநீர் தொடர்ந்து ஒழுகியதால், குடியிருப்பு வாசி ஒருவர் வீட்டிற்குள் குடில் அமைத்து, குடும்பத்தை பாதுகாத்து வருகிறார்.
















