சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15 நாட்களில் 92 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பான்மையாக அரவணை பிரசாத விற்பனையில் இருந்து 47 கோடி ரூபாயும், உண்டியல் காணிக்கை மூலம் 26 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடை திறக்கப்பட்ட கடந்த 17ம் தேதியில் இருந்து தற்போது வரை 13 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாகத் தேவசம் போர்டு கூறியுள்ளது.
















