கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தொடர் மழையால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
டிட்வா புயல் காரணமாகக் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் கணக்கரப்பட்டு, நற்கந்தங்குடி, குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் உப்பனாற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளே மழைநீர் வடியாததற்கு காரணமென விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
















