உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி இன்று தொடங்குவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாரணாசியில் இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி டிசம்பர் 15ஆம் தேதி வரை கோலகலமாக நடைபெறவுள்ளது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை விருந்தினராகவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாரணாசியில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விழா நடைபெறும் பகுதி முழுவதும் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
















