டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான உணவு மற்றும் மருத்துவ பொருட்களைப் பாகிஸ்தான் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையில் கோர தாண்டவமாடிய டிட்வா புயலால் பல்வேறு இடங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. தொடர் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை சீற்றத்தால் துவண்டுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன.
இந்தியா போர்க்கப்பல், ஹெலிகாப்டர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாரி வழங்கி வருகிறது.
சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் இலங்கைக்கு உதவுதாகக் கூறிநிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது.
பாகிஸ்தான் அனுப்பிய உணவு மற்றும் மருந்த பொருட்கள் காலாவதியானது என்று தகவல்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
நிவாரண பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பைகளில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் என அச்சிடப்பட்டிருந்தது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் காலாவதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாக இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
















