நாடாளுமன்றத்துக்கு நாய்க்குட்டியை காரில் அழைத்து வந்த காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி மன்னிப்பு கேட்க வேண்டும் எனப் பாஜக வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பியான ரேணுகா சவுத்ரி, நாடாளுமன்றத்துக்கு காரில் வந்தபோது, நாய்க்குட்டி ஒன்றை உடன் அழைத்து வந்தார்.
பின்னர், அதைக் காரில் வீட்டிற்கு திருப்பி அனுப்பினார். உரிய ஆவணங்களின்றி யாரையும் நாடாளுமன்றத்தின் உள்ளே எம்பிக்கள் அழைத்து வர முடியாது என விதியுள்ளது. இந்நிலையில் ரேணுகா சவுத்ரி நாடாளுமன்றத்தையும், அங்குள்ள எம்பிக்களையும் அவமதித்துள்ளார் என பாஜகவினர் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பதால், சாலையில் இருந்த நாய்க்குட்டியை அழைத்து வந்ததாக ரேணுகா சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.
















