காந்தாரா படக்காட்சியை மிமிக்ரி செய்தது சர்ச்சையானதை தொடர்ந்து நடிகர் ரன்வீர் சிங் மன்னிப்பு கோரினார்.
அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெற்று முடிந்தது. விழாவின் நிறைவு நாளில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும் கலந்து கொண்டார்.
அப்போது காந்தாரா படத்தில் இடம் பெற்றிருந்த ஓ என ஒலி எழுப்பும் காட்சியைக் கிண்டலடிக்கும் வகையிலான முகபாவத்துடன் ரன்வீர் சிங் மிமிக்ரி செய்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கன்னடர்களின் தெய்வங்களை ரன்வீர் சிங் கிண்டலடிப்பதாகக் கண்டன குரல்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல எனக் கூறி ரன்வீர் சிங் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
















