தனது அடுத்த படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்கிறார்களா என்பது குறித்து ரவி தேஜா விளக்கம் அளித்துள்ளார்.
ரவி தேஜாவின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாகச் சமூக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், பலரும் அதனை டிரோல் செய்தனர்.
இந்நிலையில், ரவி தேஜாவின் குழு இந்தச் செய்திகளை ஆதாரமற்றது என்று உடனடியாக நிராகரித்துள்ளது.
மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பரப்ப வேண்டாம் என்றும் அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
















