டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சீனா அவசரகால நிதியுதவியாக 10 லட்சம் டாலர் அளித்துள்ளது.
















