ஜி20-ன் வெப்சைட்டிலும் தென் ஆப்பிரிக்காவின் பெயரை நீக்கி அதிபர் டிரம்ப் அந்நாட்டை சீண்டியுள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்புக்கான சர்வதேச அமைப்பான ஜி-20ல் இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு மியாமியில் நடக்கவுள்ள ஜி 20 நாடுகளின் கூட்டத்துக்கு அமெரிக்கா தலைமை வகிக்க உள்ளது.
அதில் வெள்ளை நிற விவசாயிகளை கொடுமைப்படுத்துவதால் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ஜி20 சமூக வலைதளத்தில் டிரம்பின் கருப்பு, வெள்ளை நிறப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்காவின் பெயரும் அதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
















