எஸ்ஐஆர் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் காலக்கெடு எதுவும் விதிக்கக் கூடாது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 2ம் நாளில், எஸ்ஐஆர் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய கிரண் ரிஜிஜூ, தேர்தல் சீர்திருத்தங்கள்குறித்து விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது எனக் கூறினார்.
ஆனால் அதற்காக எதிர்க்கட்சிகள் காலக்கெடுவை வலியுறுத்தக் கூடாது என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
















