நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை, 4 ஆகக் குறைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் 2026 – 27ம் நிதியாண்டிற்குள் இதைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய பெரிய வங்கிகளை உருவாக்கவும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான பெரிய கடன்களை வழங்கும் திறனுள்ளதாக மாற்றவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இணைப்புக்குப் பின் எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா இணைந்த புதிய வங்கி என மொத்தம் நான்கு வங்கிகள் மட்டுமே செயல்படும்.
















