இந்தியாவில் தயாரித்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் விரைவில் சேவைக்கு அனுப்பப்படும் எனக் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
இந்தக் கப்பல் ஏற்கனவே சேவையில் உள்ள INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட்டை விட நீண்ட தூர அணுசக்தி ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலின் பெரிய உள்ளமைவு தாக்கும் திறனை மேம்படுத்துகிறது. விரைவில் ஐஎன்எஸ் அரிதாமன் கடற்படையில் இணைவதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு மேலும் பலப்படும் எனக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்
















