இந்திய உற்பத்தி பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்வது குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசிப்பேன் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக ரஷ்யா அதிபர் புதின் நாளை இந்தியா வருகை தருகிறார். இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தின் நோக்கம் மனதில் தெரிவித்துள்ள அதிபர் புதின், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார பிரச்னைகள் குறித்த பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, விண்வெளி, விவசாயம் மற்றம் தொழில் துறைகளில் இந்தியா மற்றும் சீனாவுடன் இணைந்து ரஷ்யா செயல்படும் என தெரிவித்துள்ள புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் இது குறித்து ஏற்கனவே ஆலோசித்தாகவும் தெரிவித்துள்ளார். இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடியுடனும் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் புதின் கூறியுள்ளார்.
















