தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி-தமிழகத்திற்கு இடையே உள்ள பந்தம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இதயத்தில் தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
ராஜேந்திர சோழன் காசியிலிருந்து, நீர் எடுத்து சென்று கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டினார் என்றும், சிறந்த புரட்சியாளரும், விடுதலை போராட்ட வீரருமான பாரதி காசிக்கு வருகை புரிந்தார் என்றும் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
















