திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மலையில் இன்று மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கம் எழுப்பி சிவபெருமானை வழிபட்டனர்.
முன்னதாக, கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்தனர். அப்போது, வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்கள் மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.
















