ராஜஸ்தானில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமாந் பகுதியில், சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















