அமெரிக்காவின் திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 4வது ஆண்டை நோக்கி நெருங்கி வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்கா அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வந்த நிலையில், பின்னர் அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார்.
அப்போது ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து புதினுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாகப் பேசியய புதினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ், ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் தங்களுக்கு பொருந்தாது என்றார்.
















