இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்பு குழுவினர் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்தியா சார்பில் மீட்பு பணிகளுக்காக மீட்பு குழு இலங்கை அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்கள் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும் விரைவாகப் பயன்படுத்தக் கூடிய கள மருத்துவமனையை அமைத்து மக்களுக்கு மருத்துவ உதவிகளை இந்திய மீட்பு குழுவினர் வழங்கி வருகின்றனர்.
















