செங்கத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காகத் தூய்மை பணியாளர்களை குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்துச் சென்ற அவலம் அரங்கேறியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அங்கு தூய்மை பணியில் ஈடுபட, செங்கம் அடுத்த பரமனந்தல் ஊராட்சியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பணியாளர்களை பேருந்தில் அழைத்துச் செல்லாமல், குப்பை அள்ளும் வாகனத்தில் அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். அதிகாரிகளின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
















