உத்தரப்பிரதேசத்தில் பானிபூரி சாப்பிட வாயைத் திறந்த பெண், தாடை எழும்புகள் விலகி அவதிக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தை சேர்ந்தவர் இன்கிலா தேவி. இவர் ஒரு தள்ளுவண்டி கடையில் நின்று பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
அப்போது பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இன்கிலா தேவியின் தாடை எலும்பு விலகியது. இதனால் கடுமையான வலியை சந்தித்த இன்கிலா தேவி, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரது தாடை எலும்பை மருத்துவர்கள் நீண்ட முயற்சிக்குப் பின் சரி செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















