நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைச் சுமூகமாக நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரண்டு நாட்களாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனைச் சரிசெய்யும் விதமாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி கூட்டத் தொடரைச் சுமூகமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மக்களவையில் டிசம்பர் 8 ஆம் தேதி வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகள் பற்றிய விவாதமும், டிசம்பர் 9 ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பான விவாதமும் நடைபெற உள்ளது.
















