பிரான்ஸ் நாட்டிற்கான போலி விசாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக கும்பலை, டெல்லி போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், பாரீஸ் செல்வதற்காக டெல்லியில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றபோது, அவர்கள் கொண்டு சென்றது போலி விசா என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாமக்கல்லை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலி விசா பெற்றது தெரியவந்தது. மேலும், 16 பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி விசா தயார் செய்ததும் அம்பலமானது. இதுதொடர்பாக, கண்ணனை கைது செய்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.
















