போதைப்பொருள் கடத்தலில் சிறை தண்டனை பெற்ற ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு மன்னிப்பு வழங்கி டிரம்ப் விடுவித்துள்ளார்.
ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ, அமெரிக்காவிற்குள் 400 டன் கொக்கைன் கடத்த உதவிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் தனது அதிபர் பதவியைப் பயன்படுத்தி மன்னிப்பு வழங்கி உள்ளார்.
ஹோண்டுராஸில் நடக்க உள்ள தேர்தலில் டிரம்ப், ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சியை ஆதரிக்கிறார்.
எனவே இந்த மன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்காக வெனிசுலா மீது போர்க்கொடி தூக்கும் டிரம்ப், ஆர்லோண்டாவுக்கு மட்டும் மன்னிப்பு வழங்கியது பேசுபொருளாகியுள்ளது.
















