CBSE பள்ளிகளில் அடுத்தாண்டு நவம்பர் மாதம் வரை, வந்தே மாதரம் பாடல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, CBSE நிர்வாகத்தின் கல்விசார் இயக்குநர் பிரக்யா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வந்தே மாதரம்’ பாடலை, மாணவர்கள் நினைவு கூரும் வகையில், பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடலின் பொருள் குறித்து ஆசிரியர்கள் விளக்க வேண்டும் எனவும், பாடல் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.
















