செயற்கை நுண்ணறிவு குறித்து ராஷ்மிகா பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தனது எக்ஸ் பக்கத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், செயற்கை நுண்ணறிவு மனித முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி எனவும், ஆனால், அதைப் பெண்களுக்கு எதிராகச் சிலர் பயன்படுத்துகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இணையம் இனி உண்மையின் பிரதிபலிப்பு அல்ல எனத் தெரிவித்துள்ள ராஷ்மிகா, அது எதையும் கற்பனை செய்து உருவாக்கக்கூடிய ஓர் ஓவியப் பலகை எனவும் பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
















