திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று அதிகாலை முதலே அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து கருவறை முன்பு 5 மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், வெளியூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்த திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று அண்ணாமலையாரை மனமுருகி வழிபட்டனர்.
தொடர்ந்து பின்புறமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்த நிலையில், அரோகரா முழக்கம் விண்ணை பிளக்க அவர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிரிவல பாதையை வலம் வந்து சிவபெருமானை வழிபட்டனர்.
















