ஆன்மீகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற யார் இணைந்தாலும் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பிரச்சாரத்திற்காக வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் லக்கூர் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த {கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்,
பின்னர் செய்தியாளர்கள் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இணைவரா என்ற கேள்விக்கு ஆன்மீகத்திற்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற யார் இணைந்தாலும் வரவேற்பேன் என தெரிவித்தார்.
















