சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது கலால் வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய கலால் திருத்தச் சட்ட மசோதா 2025 மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025 ஆகிய இரண்டு மசோதாக்களை மக்களவையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
இதனைதொடர்ந்து மத்திய கலால் திருத்த சட்ட மசோதா 2025-ஐ மக்களவையில் ஒப்புதல் பெறுவதற்காக நிா்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படாத புகையிலை பொருட்கள் மீது 60 முதல் 70 சதவீத கலால் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுருட்டு வகைகள் மீது 25 சதவீத கலால் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 65 மில்லி மீட்டர் நீளம் கொண்ட ஃபில்டா் இல்லாத ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 2 ஆயிரத்து 700 ரூபாய் வீதமும், 65 மில்லி மீட்டர் முதல் 75 மில்லி மீட்டர் நீளம் கொண்ட சிகரெட்கள் மீது 4 ஆயிரத்து 500 ரூபாய் அளவிலும் கலால் வரி விதிக்கப்பட உள்ளது.
















