144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி சனாதன தர்மத்தின் மீது தாக்குதல் நடத்திய திமுக ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்புவாரகள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் கொடூர ஆட்சி, மீண்டும் ஒரு முறை இந்துக்களின் முதுகில் குத்தியுள்ளது. பாசிச திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை மீறி காவல் துறையை ஏவி திருப்பரங்குன்றம் மலையின் தீபத்தூணில் இந்து சமுதாய மக்களை தீபம் ஏற்ற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் நம்பிக்கையை மோசடி திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை தகர்த்தெறிந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு அரசியல் சட்டத்தை படுகொலை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உயர் நீதிமன்றம் இரண்டாவது முறை உத்தரவு பிறப்பித்த பிறகும் கூட 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி, இந்துக்களின் நம்பிக்கை மீதும் சனாதன தர்மத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துள்ளது. நாசக்கார திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
















