திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், அதனை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேல்முறையீட்டு மனுவை காரணம் காட்டி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
















