ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பொழிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா ப்யணிகள் வருகை புரிகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் சாரல் மழை மற்றும் கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
இந்நிலையில், கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பொழிந்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மேலும், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.
















