திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர் சட்டமன்ற உறுப்பினர் பேட்ச் அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ஏராளமான பக்தர்கள் பாஸ் வைத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் லோகேஷ் என்பவர் சட்டமன்ற உறுப்பினர் பேட்ச் அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொதுமக்கள், பக்தர்கள், செய்தியாளர்கள் என அனைவரையும் பரிசோதனை செய்து கோயிலுக்குள் அனுமதித்த போலீசார், இவரை ஏன் பரிசோதனை செய்யவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
















