பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் - தேர்தல் ஆணையம்
Jul 20, 2026, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக விவகாரத்தில் பிரச்னை நீடித்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவரும் சூழலில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அன்புமணி கட்சியை அபகரித்துவிட்டதாக ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வில் வழக்கானது விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பினர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அன்புமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என்றும், ராமதாஸ் தான் பாமக கட்சியின் நிறுவனர் எனவும் ராமதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அதேபோல, கட்சியின் தலைவராகத் தன்னை பாமக அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அப்போது, கட்சியின் தலைவர் விவகாரத்தில் எந்தத் தனிப்பட்ட முடிவையும் தாங்கள் எடுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இருதரப்புக்கும் பிரச்னை நீடித்தால் கட்சியின் சின்னம் யாருக்குமின்றி முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனத் தெரிவித்தனர்.

மேலும், பாமக வழக்கில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு ராமதாஸ் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: pmkIf the issue with the PMK continuesthe mango symbol will be banned - Election Commissionமாம்பழம் சின்னம் முடக்கப்படும்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலுக்கு எம்.எல்.ஏ பேட்ச் அணிந்து சென்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர்!

Next Post

பீகார் : திருமண நிகழ்வில் ரசகுல்லா தீர்ந்ததால் நடந்த களேபரம்!

Related News

ஜந்தர் மந்தரின் CJP கூடாரங்கள் அகற்றம்ல; காவல்துறை நடவடிக்கை

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் வீட்டுக்கு சீல்!

வடலூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் – எழுத்தரை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்!

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies