சென்னை தாம்பரம் அருகே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கால்வாய்களை மக்கள் தூர்வாரிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
டிட்வா புயல் எதிரொலியாகச் சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. பம்மல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைய மக்கள், தாமாகவே முன்வந்து கால்வாய்களைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மக்களின் இந்தச் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















