திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை திருவொற்றியூர் ஏழாவது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அண்ணா நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களை வாங்க முழங்கால் அளவு மழைநீரில் நீந்திச் செல்வதாகவும், கடந்த 3 நாட்களாகத் தேங்கியுள்ள மழைநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடுகளை சுற்றி தேங்கியுள்ள மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















