சேலம் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழவிருந்த ஐயப்ப பக்தரை ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயமணி. சபரிமலைக்கு செல்வதற்காகத் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணித்துள்ளார்.
ரயில் சேலத்தில் நின்றபோது தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். ஆனால் ரயில் புறப்பட்டதை பார்த்த அவர் ஓடிச் சென்று ஏற முயன்றபோது தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார்.
அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர்கள் துரிதமாகச் செயல்பட்டு பயணியைக் காப்பாற்றினர்.
















