கனமழை காரணமாகச் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் மழைநீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகத் திருமுல்லைவாயல் பகுதியின் ஒன்பதாவது வார்டில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவுகு மேல் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க வெளியே செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற, மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















