விவசாயிகள் விளைவித்த நெல்லை சேமிக்க கூடத் தகுதியற்ற அரசாகத் திமுக இருப்பதாகப் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வேதகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருள் தடையற்று கிடைப்பதே கொலை சம்பவங்களுக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசுத் திட்டங்களை எதிர்ப்பதே திமுகவின் முக்கிய பணியாக இருப்பதாக விமர்சித்த அவர், விவசாயிகள் விளைவித்த நெல்லை சேமிக்க கூடத் தகுதியற்ற அரசாகத் திமுக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
















