புதுச்சேரி சின்னக் காலாப்பட்டு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்காததைக் கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் படகுடன் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மீனவ கிராமமான சின்னக் காலப்பட்டு பகுதியில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடல் அரிப்பினால் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், சின்னக் காலப்பட்டு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கப்படாததைக் கண்டித்தும், கடல் அரிப்பால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசார், மீனவர்களுகடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒருவாரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கலைந்து சென்றனர். மீனவர்களின் திடீர் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















