ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் – 2024 என்பது கொண்டு வரப்பட்டது.
இச்சட்டத்தின் படி 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாது. இது வரும் 10 முதல் அமலுக்கு வருகிறது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.
















