பாரதம் எப்போதும் அமைதியையே விரும்புவதாக பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, உலகிற்கு நலன் என்பது அமைதியின் மூலமே கிடைக்கும் என்று கூறினார். அதேபோல் பாரதம் எப்போதும் அமைதியையே விரும்புவதாகவும், அமைதிக்கான முயற்சியை பாரதம் எப்போதும் ஆதரிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















