தமிழர் பண்பாட்டைப் பறிக்க பத்திரிகைகளை மிரட்டும் பாசிச திமுக அரசு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபமேற்ற இரண்டாவது நாளாகத் திமுக அரசு தடைவிதித்த குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தியை மிரட்டும் தொனியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிவு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழர் பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் ஒரே நோக்கத்தைக் கொண்டு நீதிமன்ற உத்தரவை மீறியதோடு மட்டுமல்லாது, உண்மைச் செய்தியை வெளியிட்ட பழம்பெருமைமிக்க ஒரு பத்திரிகை நிறுவனத்தைக் குற்றஞ்சாட்டுவது வரை அனைத்து பாசிச நடவடிக்கைகளிலும் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிலும் உண்மையை உரத்துக் கூறி, திமுகவின் ஐடி விங்காகச் செயல்பட மறுக்கும் ஊடகங்களை மிரட்டும் ஆளும் அரசின் இந்தப் போக்கு சரியல்ல
ஜனநாயக தேசத்தில், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க முற்படும் அறிவாலய அரசு, தனது சர்வாதிகாரப் போக்காலேயே வரும் சட்டமன்றத் தேர்தலில் சரிவைச் சந்திக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















